Thursday 3 September 2009

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3

கதையும், ஆன்மிகமும், கவிதையும் என்னை நேசித்து கொண்டிருக்கும் வேளையில் இந்த அறிவியல் என்னை பயமுறுத்துகிறது.

ஒரு விசயம் என்னை மிகவும் பாடுபடுத்தியது. ஒரு பகவத் கீதை தந்த கிருஷ்ணரோ (கடவுளின் அவதாரமாகத் தன்னை சொல்லிக் கொண்டவர்) பைபிள் தந்த இயேசுவோ (கடவுளின் மகன் எனச் சொல்லிக் கொண்டவர்) குர்-ஆனை தந்த நபிகள் (இறைத் தூதராக தன்னை காட்டிக் கொண்டவர்), இவர்களுக்கெல்லாம் இந்த அணுக்களை பற்றி, விதிகளைப் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லாமல் போனதா, இல்லை பொருள்கள் எல்லாம் ஆன்மிகத்திற்கு எதிர் என விட்டு விட்டார்களா? மனித குல நெறிமுறைகளைப் பற்றித்தானே அவை அதிகம் பேசுகின்றன, ஆனால் இப்போது இவர்கள் எழுதியதை விஞ்ஞானத்தோடு ஒப்புமைப்படுத்தி பேசும் நிலை வந்து கொண்டிருக்கிறது.

டால்டனும், ரூதர்ஃபோர்டும், மேன்டலீவும் எதற்கு கடவுள் தந்தது என அவர்கள் கண்டதைச் சொல்லவில்லை? தன்னலம் அற்ற மனிதர்கள் இவர்கள்? அப்படியென்றால் அவர்கள்? வினாக்களுடன் அறிவியல் பயணிக்கிறது.

டால்டனுக்கு ஒரு அதிசயம் அவரது மனதில் நிகழ்ந்தது. இந்த அணுக்கள் இருப்பதை அவருக்குள் ஏதோ ஒன்று உணர்த்த அணுக்கொள்கையை முதலில் சொல்லியதோடு அணுவை பிளக்கலாம் என கூறிவிட்டார். ஆனால் அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என நமது வேதங்கள் பல வருடங்களுக்கு முன்னமே தெரிந்து வைத்து இருந்தது? இந்த அறிவியல் நுட்பம் எல்லாம் ஐந்நூறு வருடங்களுக்குள் நிகழ்ந்தவைகள்தான் எனலாம். நாற்பதாயிரம் வருடங்கள் முன்னர் இருந்த அட்லாண்டிஸ் நாகரீகம் பற்றியெல்லாம் சொல்வார்கள். அது குறித்த ஆராய்ச்சி அவசியமில்லை.

எலக்ட்ரான் புரோட்டான் எல்லாம் 18ம் நூற்றாண்டுகளில்தான் வெளிச் சொல்லப்பட்டன. இதற்கு முன்னர் இருந்தவைகள்தானே இவை. உலகம் தோன்றி பில்லியன் வருடங்களில் இந்த 200 வருடங்கள் பெரும் சோதனைக் காலங்கள், சாதனைக் காலங்கள் எனலாம். டார்வின் கூட இந்த 18ம் நூற்றாண்டின் சொந்தக்காரர். ஆக நமது அறிவு விழித்துக் கொண்டது இந்த 200 வருடங்களில்தானா? இல்லை, இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போனால் 16ம் நூற்றாண்டும் கண்ணுக்குத் தெரியும். கலிலியோ... இன்னும் பின்னோக்கிப் போனால் உலகம் தோன்றிய அந்த பில்லியன் வருடங்களும் தெரிந்தாலும் தெரியும்?

ஆனால் வேதியியலின் வித்து டால்டன் எனும் அற்புத மனிதனே. ரூதர்ஃபோர்டின் அணுக்கொள்கை இவரிடமிருந்து சற்று வித்தியாசப்பட்டது. ரூதர்ஃபோர்டு கூற்றுப்படி வேகமாக எலக்ட்ரான்கள் புரோட்டானை சுற்றும் எனில் நாளடைவில் எலக்ட்ரான் சக்தியிழந்து வலுவிழந்து விடும், எனவே அது தவறு எனச் சொல்லி எலக்ட்ரான் ஒரு நிலையில் இருந்து வேறு நிலைக்கு மாறும் போது மட்டுமே சக்தி இழப்போ, ஏற்போ நடைபெறுகிறது, ஒரே நிலையில் இருக்கும்போது எந்த மாற்றமும் அடைவதில்லை ஆதலால் அந்த எலக்ட்ரான் புரோட்டானுக்குள் சென்று விழச் சாத்தியமில்லை எனச் சொன்னவர் போஹ்ர்.

இவர்கள் தாங்கள் கண்டது தவறாக இருக்கும் எனச் சொல்லாமல் விட்டார்களா? இல்லை மறைத்து வைத்தார்களா? என்ன கண்டார்களோ அதை அப்படியேச் சொன்னார்கள். சொன்னது தவறு என பின்னால் வந்த வல்லுநர்கள் நிரூபித்துக் காட்டினார்கள். அறிவியலில் எல்லாமே சரிதான் எனும் கொள்கை எப்போதும் இருப்பதில்லை. இடைச்செருகல்கள் எல்லாம் ஒன்றும் செய்ய முடியவில்லை இங்கு. அறிவியலுக்கு தவறோ, சரியோ நிரூபிக்கச் சாத்தியக் கூறுகள் தேவை, அவ்வாறு இல்லாதபட்சத்தில் அது ஒரு கொள்கையாக மட்டுமே கருதப்படும். ஆனால் ஆன்மிகத்திற்கு? எதையும் தவறாகப் பார்க்காத ஒரு துறை எதுவெனில் அது ஆன்மிகம்தான்.

(தொடரும்)

9 comments:

Robin said...

கடவுளின் மகன் எனச் சொல்லிக் கொண்டவர் விஞ்ஞானத்தை பரப்ப வந்தவரல்ல மெஞ்ஞானத்தை பரப்ப வந்தவர்.

கலகலப்ரியா said...

classroom la irukkira feeling varuthunga.. very interesting..! nalla flow..! ipdi solli koduththaa pasangalukku bore adikkaathunga..!

Radhakrishnan said...

//Robin said...
கடவுளின் மகன் எனச் சொல்லிக் கொண்டவர் விஞ்ஞானத்தை பரப்ப வந்தவரல்ல மெஞ்ஞானத்தை பரப்ப வந்தவர்//

இதைவிடச் சிறப்பாக எவரும் இத்தனை எளிமையாக பதில் சொல்லிவிட முடியுமா என்னவோ? மிகவும் ரசித்தேன், மிக்க நன்றி ராபின் அவர்களே.

Radhakrishnan said...

//கலகலப்ரியா said...
classroom la irukkira feeling varuthunga.. very interesting..! nalla flow..! ipdi solli koduththaa pasangalukku bore adikkaathunga..!//

மிக்க நன்றி கலகலப்ரியா அவர்களே.

தேவன் said...

///அறிவியலில் எல்லாமே சரிதான் எனும் கொள்கை எப்போதும் இருப்பதில்லை. இடைச்செருகல்கள் எல்லாம் ஒன்றும் செய்ய முடியவில்லை இங்கு///

அது மெய்ஞானம் அல்லவே விஞ்ஞானம் தானே அதான் மாறுது நன்றி ஐயா, நல்ல தகவல்.

கிருஷ்ண மூர்த்தி S said...

/தவறே இல்லாத ஒரு துறை எதுவெனில் அது ஆன்மிகம்தான். தவறு தவறாகப்படாத போது அதெப்படி தவறாக இருக்கமுடியும் எனும் மனநிலையே காரணம்./

இங்கே மன நிலை என்று கொள்வது தவறான ஊகங்களுக்கு இடம் கொடுக்கும்; ஆன்மீகத்தைப் பற்றிய தவறான புரிதலாகவும் ஆகிவிடக் கூடும். மனம், மன நிலை என்பதே மாறிக் கொண்டே இருப்பது -இதைப் புரிந்துகொண்டாலே, மாறிக் கொண்டிருப்பதில் இருந்து ஆன்மீகத்தை அறிய முடியாது என விளங்கும். அதனால் தான், தத்துவ மரபில் உண்மையைக் காணும் வழியாக மனமிறந்த நிலை, மனமற்ற நிலை என்பது வலியுறுத்திச் சொல்லப் படுகிறது.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் கொஞ்சம் எச்சரிக்கையோடு சொல்ல வேண்டியிருக்கிறது. ஆன்மிகம், என்பது அனுபவ சத்தியம், அறிவின் சாரம் என்ற நிலையில், அது தவறாக எதையும் பார்ப்பதில்லை, அல்லது அந்த நிலைக்கு உயரும்போது, தவறுகள் செய்கிற இயல்பிலிருந்து விடுபட்டிருப்பது என்று கூட சொல்ல முடியும்.

தவிர தவறு அல்லது சரி என்ற முடிவுகள், ஒரு கணிதத் தேற்றம் போல ஒரே ஒரு சரியான முடிவை மட்டும் கொண்டிருப்பதில்லை. நேரெதிரான பார்வையில் எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்ற சாத்தியப் பாட்டை ஆன்மிகம் நிராகரிப்பது இல்லை. அது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறது, இந்த அடிப்படையில், தவறே இல்லாத துறை என்பதற்குப் பதிலாக, எதையும் தவறாகப் பார்க்காத துறை ஆன்மிகம் என்று பார்த்தால், பல கேள்விகளுக்கு விடை சுலபமாகக் கிடைக்கும்.

Radhakrishnan said...

மிக்க நன்றி கேசவன் அவர்களே.

மிகவும் அழகான, அருமையான விளக்கம் ஐயா. தங்களின் தெளிவான பார்வைக்கும், என்னிடமிருக்கும் தெளிவில்லாத பார்வைக்கும் உள்ள வித்தியாசம் கண்டேன். பிரமித்தேன். திருத்தி அமைத்துவிடுகிறேன் ஐயா.

Shakthiprabha (Prabha Sridhar) said...

/எதையும் தவறாகப் பார்க்காத ஒரு துறை எதுவெனில் அது ஆன்மிகம்தான். /

தொடருங்கள். படிக்கக் காத்திருக்கிறோம்.

Radhakrishnan said...

விரைவில் தொடர்கிறேன் ஷக்தி அவர்களே. மிக்க நன்றி.